அந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது - மனம் திறந்த சமந்தா
நிறைவேறாத ஆசை ஒன்று உள்ளதாக நடிகை சமந்தா உருக்கமாக பேசியுள்ளார்.
சமந்தா
பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சமந்தா, தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
உடல்நலக்குறைவு காரணமாக சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து விலகியிருந்த சமந்தா, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் 'சிடாடல்- ஹனி பன்னி' வெப்தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது Maa Inti Bangaram என்ற தெலுங்கு படத்திலும் Rakt Brahmand: The Bloody Kingdom என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார்.
நிறைவேறாத ஆசை
இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "15 ஆண்டுகளுக்கு முன், கல்லூரி படிப்புக்குப் பின் சிட்னி பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது.
Before stepping into the world of cinema, #Sam had a dream of pursuing higher education at the University of Sydney. Though destiny led her to become a phenomenal actress, her passion for learning remains truly inspiring! 🎓♥️✨#Samantha #SamanthaRuthPrabhu #TeamSamantha pic.twitter.com/kbaR9ahRQb
— 𝐓𝐞𝐚𝐦 𝐒𝐚𝐦𝐚𝐧𝐭𝐡𝐚™ (@TeamSamantha__) March 25, 2025
ஆனால் அந்த கனவு நிறைவேறாமல் போய்விட்டது" என்று உருக்கமாக பேசியுள்ளார். சமந்தா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |