நான் கைநிறைய சம்பாதிக்கிறேன்.. எனக்கு ஜீவனாம்சம் தேவையில்லை! ரூ.200 கோடியை உதறி தள்ளிய நடிகை சமந்தா
நடிகை சமந்தா அவரது கணவரை விவாகரத்து செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்ததையடுத்து தனக்கு ஜீவனாம்சம் தேவையில்லை என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை கடந்த 2017ஆம் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் எங்கு சென்றாலும் சாய்-சாம் என்றே ரசிகர்கள் கொண்டாடினர்.
திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடித்து கொண்டு வந்தார் சமந்தா. கடந்த சில மாதங்களாகவே இருவரும் ஹைதராபாத்தில் தனித்தனி வீட்டில் வாழ்வதாக போன்ற செய்திகள் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வந்தது.
சமீபத்தில் நாக சைத்தன்யா மற்றும் சமந்தா இருவரும் தங்களின் பிரிவை சமூக வலைத்தளங்களில் அதிகாரபூர்வமாக உறுதி செய்தனர். இதையடுத்து நாக சைத்தன்யா குடும்பத்தினர் ஜீவனாம்சம் குறித்து சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் சமந்தாவுக்கு ரூ.200 கோடி வரை ஜீவனாம்சம் பேசப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை சமந்தா மறுத்துவிட்டார். நான் கைநிறைய சம்பாதிக்கிறேன். நான் எனது சொந்த காலில் நிற்க கூடியவள். யாருடைய பணமும் எனக்கு வேண்டாம். என்னை நான் பார்த்து கொள்வேன் என்று கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கடினமான சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் பேசிய சமந்தாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.