நடிகை சமந்தாவுக்கு ஜீவானம்சம் கொடுக்க முடிவு செய்த அக்கினேனி குடும்பத்தினர்! எவ்வளவு தெரியுமா? வெளிவரும் தகவல்
பிரபல திரையுலக ஜோடியான சமந்தா மற்றும் நாக சைத்தன்யா ஜோடி பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், ஜீவானம்சம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரியப் போவதாகவும் இதற்காக நீதிமன்றத்தை இருவரும் நாடி உள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், இது குறித்து இருவருமே எந்த ஒரு தகவலும் கூறாமல் இருந்தனர். இதையடுத்து இன்று இருவருமே இதை உறுதி செய்யும் வகையில், தாங்கள் இருவரும் பிரியவுள்ளோம் என்று அறிவித்துள்ளனர்.
— chaitanya akkineni (@chay_akkineni) October 2, 2021
இது குறித்து நாக சைத்தன்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நானும் சமந்தாவும் கணவன், மனைவி பந்தத்தில் இருந்து பிரிவதாக முடிவு செய்துள்ளோம்.
இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு ரசிகர்கள், ஊடகங்கள், நலம்விரும்பிகள் ஆதரவு கொடுத்து எங்களின் தனிப்பட்ட வாழ்வை கடக்க ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறோம். உங்கள் ஆதரவுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
இந்த முடிவு குறித்து பல மாதங்கள் சிந்தித்த பின்னரே நாக சைத்தன்யா இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இதற்காக நாக சைத்தன்யாவின் அக்கினேனி குடும்பத்தினர் சமந்தாவுக்கு 200 கோடி ரூபாய் ஜீவானம்சம் கொடுக்க முன்வந்துள்ளனர்.
ஆனால், சமந்தாவோ இது எல்லாம் எனக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். அதன் பின்னும் பல சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, இறுதியில் தோல்வியடைந்துவிட்டதாக அங்கிருக்கும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.