அது கடினமான முடிவு, இனி அந்த பேச்சுக்கே இடமில்லை! திருமண முறிவு குறித்து மனம் திறந்த சமந்தா
நாக சைதன்யாவை பிரிந்தது கடினமான முடிவாக இருந்தாலும், சரியான தீர்வாக அமைந்ததாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
நட்சத்திர தம்பதியாக வலம் வந்த நாக சைதன்யா மற்றும் சமந்தா ஜோடி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இருவரும் மனமுவந்து பிரிந்தாலும் அவர்களது ரசிகர்களுக்கு அந்த முடிவு சோகத்தை ஏற்படுத்தியது. எனினும் நாக சைதன்யா, சமந்தா இருவரும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சமந்தாவிடம் அவரது திருமண வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய சமந்தா,
'திருமண வாழ்க்கையில் இணக்கமில்லாத சூழலின்போது பிரிவதைத் தவிர வேறு வழியில்லை. அது கடினமான முடிவாக இருந்தாலும், அதுவே எங்களுக்கு சரியான தீர்வாக அமைந்தது. திரும்பவும் காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை.
நான் இப்போது மிகவும் உறுதியாக உள்ளேன். இந்த வாழ்க்கை முறை எனக்கு வசதியாக உள்ளது. இனிமேல் தான் இன்னும் வெளிப்படையாகவே இருப்பேன்' என தெரிவித்தார். சமந்தாவின் தெளிவான, வெளிப்படையான இந்த கருத்துக்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.