சினிமாவில் இருந்து விலகுகிறார் சமந்தா?
நடிகை சமந்தா திரைத்துறையில் இருந்து மீண்டும் இடைவெளி எடுப்பதாக முடிவு செய்துள்ளார்.
இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குஷி.
இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஒரு சில தினங்களில் முடிந்துவிடும் என கூறப்படுகிறது.
அண்மையில், அமேசான் பிரைம் வீடியோவின், சிட்டாடல் என்ற வெப் தொடரின் தனது பகுதியின் படப்பிடிப்பை முடித்திருந்தார் சமந்தா.
குஷி மற்றும் சிட்டாடல் படங்களுக்கு பிறகு சமந்தா ஒரு வருடம் பிரேக் எடுப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு சமந்தா 'மயோசிடிஸ்' எனப்படும் ஆட்டோ இம்யூன் நிலை இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், சமந்தா எடுக்கும் பிரேக்கில் அவருக்கு கூடுதல் சிகிச்சை பெற்று முழுவதுமாக குணமடைவார் என கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே செய்திருந்த ஒப்பந்தங்களுக்கான முன்பணத்தை தயாரிப்பாளர்களிடம் திருப்பி கொடுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் புதிய ஒப்பந்தங்களில் சமந்தா கையெழுத்திடவில்லை.
சமீபத்தில் சமந்தா அளித்த பேட்டியில்," ஒரு நாள் நான் குண்டாக இருக்கிறேன். ஒருநாள் குண்டாக இல்லை. ஒரு நாள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன். நான் எப்படி இருக்கிறேன் என்பதில் எனக்கு கட்டுப்பாடு இல்லை. கடந்த 8 மாதங்களாகவே என் கண்களில் வலி உள்ளது" என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |