என்னை சிறையில் தள்ள வேண்டுமா? நடிகை சமந்தா வேதனையுடன் கேள்வி
ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுத்துவது குறித்து பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து நடிகை சமந்தா அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அரியவகை நோயால்
நடிகை சமந்தா மயோசைட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் Podcast மூலமாக சமந்தா மருத்துவம் குறித்தும், தான் எடுத்து வரும் சிகிச்சைகள் பற்றியும் பேசி வருகிறார்.
இந்த நிலையில் தான் சமந்தா ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுத்துவது குறித்து பேசிய சர்ச்சையானது. இது தவறான சிகிச்சை முறை என்று The Liver DoC என்ற சமூக வலைதள Influencer கடுமையாக விளாசினார்.
அவர் சமந்தா கூறும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுத்தும் முறை உடலுக்கு தீங்கானது என அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது என்றும், மில்லியன் கணக்கில் தன்னை பின்தொடர்பவர்களை முட்டாளாக்கும் முயற்சியில் ஈடுபடும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தா பதில்
அவரது இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது நடிகை சமந்தா பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
''கடந்த சில ஆண்டுகளாக நான் மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்தையும் நான் முயற்சித்தேன். இந்த பரிந்துரைகள் மிகவும் தகுதி வாய்ந்த நிபுணர்களிடம் இருந்து வந்தவை. ஆனால், என்னைப் பற்றி கடுமையாக விமர்சித்தவர் என்னை விட அதிகமாக அறிந்தவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவருடைய நோக்கம் உன்னதமானவை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இருப்பினும், அவர் தனது வார்த்தைகளால் மிகவும் என்னை கஷ்டப்படுத்திவிட்டார். குறிப்பாக, என்னை சிறையில் தள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். நான் ஒரு பிரபல நடிகையாக இருப்பதால் என் மீது அவருக்கு என்ன வன்மமோ தெரியவில்லை. இப்படியெல்லாம் comment போட்டுள்ளார்.
ஆனால், இந்த விடயத்தை நான் நேரடியாக deal செய்யாமல், அந்த மருத்துவரையும் எனக்கு மருந்துகளை பரிந்துரைத்த மருத்துவரையும் விட்டு விவாதிக்க வைத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என நினைக்கிறேன். இதற்கு மேல் மருத்துவ குறிப்புகளை கூறுவதற்கு முன் மேலும் கவனமாக இருக்க விரும்புகிறேன்'' என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |