கமகமக்கும் கல்யாண வீட்டு அரைச்சுவிட்ட சாம்பார்.., எப்படி செய்வது?
கல்யாண வீட்டில் செய்யப்படும் சாம்பாரை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், கமகமக்கும் கல்யாண வீட்டு அரைச்சுவிட்ட சாம்பார் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு- ½ கப்
- பாசி பருப்பு- 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- கொத்தமல்லி- 2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 2
- சீரகம்- 1 ஸ்பூன்
- பூண்டு- 5 பல்
- கடலை பருப்பு- 1 ஸ்பூன்
- தேங்காய்- 3 ஸ்பூன்
- நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 2 கொத்து
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 15
- பச்சைமிளகாய்- 2
- தக்காளி- 2
- காய்கறிகள்- தேவையானவை
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மல்லி தூள்- 1 ஸ்பூன்
- குழம்பு தூள்- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- பெருங்காயம்- ½ ஸ்பூன்
- புளி- எலுமிச்சை அளவு
- நெய்- 1 ஸ்பூன்
- வெல்லம்- 1 துண்டு
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் கழுவிய துவரம் பருப்பு, பாசி பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு, கடலை பருப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து அரைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணய், கடுகு, வெந்தயம், பூண்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

இதற்கடுத்து இதில் விருப்பமான காய்கறிகள் சேர்த்து வதக்கி அதில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இதில் உப்பு, பெருங்காயம் வேகவைத்த பருப்பு, தண்ணீர் மற்றும் புளி தண்ணீர் சேர்த்து காய்கறிகளை வேகவைக்கவும்.
இறுதியாக இதில் நெய், வெல்லம் மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான கல்யாண வீட்டு அரைச்சுவிட்ட சாம்பார் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |