சமீர் ரிஸ்வியின் அபார ஆட்டத்தால் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி
லக்னோவில் நடைபெற்ற IPL 2026 போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இப்போட்டியின் ஹீரோவாக 22 வயதான சமீர் ரிஸ்வி விளங்கினார்.
லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 18.4 ஓவர்களில் 141 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
டெல்லி பந்துவீச்சாளர்களில் லுங்கி ந்கிடி (3/27), டி.நடராஜன் (3/29), குல்தீப் யாதவ் (2/31) ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

142 ஓட்டங்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி, ஆரம்பத்தில் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
ஆனால், Impact Substitute-ஆக வந்த சமீர் ரிஸ்வி 47 பந்துகளுக்கு 5 பவுண்டரி, 4 சிக்ஸ் அடித்து அவுட்டாகாமல் 70 ஓட்டங்கள் எடுத்து தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவருடன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (39* ஓட்டங்கள்) இணைந்து 119 ஓட்டங்கள் கூட்டணி அமைத்து அணியை வெற்றிப்பதைக்கு எடுத்து சென்றனர்.

ரிஸ்வி தனது ஆட்டத்தில் முதிர்ச்சியையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். முக்கிய தருணத்தில் ஷஹ்பாஸ் அஹ்மத் வீசிய ஓவரில் 16 ஓட்டங்கள் குவித்து போட்டியின் ஓட்டத்தை மாற்றினார். பின்னர், சிக்ஸர்களால் லக்னோ அணியின் நம்பிக்கையை முறியடித்தார்.
இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் IPL 2026-இல் தங்கள் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது. லக்னோ அணி, தவறான தந்திரங்களாலும், பலவீனமான பேட்டிங்காலும் தோல்வியை சந்தித்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Sameer Rizvi IPL 2026, Delhi Capitals vs Lucknow Super Giants, DC vs LSG highlights, IPL 2026 match results, Rizvi unbeaten 70 runs, Tristan Stubbs partnership DC #IPL2026 #DelhiCapitals #LucknowSuperGiants #SameerRizvi #DCvsLSG #CricketNews #IPLCricket