இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை சமீரா ரெட்டி! 11 கிலோ குறைத்தது எப்படி? வைரல் புகைப்படம்
ஒரு காலத்தில் தமிஷ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சமீரா ரெட்டி. இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.
இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதால் மிகவும் பிரபலமானார். பின்னர் 2014ஆம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
சமீபத்தில் பெண் குழந்தைக்கு தாயான சமீரா ரெட்டியின் உடல் எடை தாறுமாறாக ஏறிய நிலையில் கடந்த வருடம் 92 கிலோ எடையில் இருந்துள்ள அவர், தற்போது தீவிர உடற்பயிற்சி மற்றும் சில விஷயங்களை கடைபிடித்து 11 கிலோ எடை குறைத்து தற்போது 82 கிலோ எடையில் உள்ளார். உடல் எடை குறைத்தது குறித்து அவர் கூறியதாவது,
முதலில் உடல் எடை குறைக்க முடியுமா? என்ற நெகட்டிவ் எண்ணத்திலிருந்து விடுபட வேண்டும். நான் தற்போது நல்ல உடல் தகுதியுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பின் நிறைய வேலைகளை மகிழ்ச்சியாக செய்து வருகிறேன்.
அதுபோல ஒர்க்கவுட்டை மட்டுமே நம்பாமல் ஏதாவது ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். இது உடற்பயிற்சியை விளையாட்டாகவே செய்ய உதவும். ஒவ்வொரு வாரமும் உங்கள் முன்னேற்றத்தை சரியாக இருக்கிறதா என்று சரிபார்க்க நண்பர்களை கூடவே வைத்துக் கொள்ளுங்கள்.
எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் உடனடியாக உடல் எடையை குறைக்க முயற்சிக்காதீர்கள். உங்கள் உடல் எடையை நினைத்து நீங்கள் வருத்தப்படுவதால் எந்த மதிப்பும் கிடையாது என்று சமீரா தன்னுடைய உடற்பயிற்சி அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.