இலங்கை நட்சத்திர வீரருக்காக SLC-யிடம் முக்கிய கோரிக்கை வைத்த முன்னாள் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர்
இலங்கை நட்சத்திர வீரர் குசால் மெண்டீஸை மீண்டும் இலங்கை அணிக்காக விளையாட அனுமதிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரித்திடம் முன்னாள் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சமீத் பட்டேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
2021 லங்கா பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் பனுக ராஜப்க்சே தலைமையிலான காலி கிளேடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி திசாரா பெரேரா தலைமையிலான ஜாப்னா கிங்ஸ் அணியும் கோப்பை கைப்பற்றியது.
லங்கா பிரீமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஜாப்னா, தற்போது தொடர்ந்து 2வது சீசனிலும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி கோப்பையை தக்கவைத்தள்ளது.
இத்தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் காலி அணிக்காக விளையாடி குசால் மெண்டீஸ் 327 ரன்களுடன் முதலிடத்தை பிடித்தார்.
எனினும், இந்த பட்டியில் 312 ரன்களுடன் 2வது இடம்பிடித்த ஜாப்னா வீரர் அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் காலி அணிக்காக விளையாடிய இங்கிலாந்து முன்னாள் ஆல்-ரவுண்டர் சமீத் பட்டேல் 16 விக்கெட்டுகளுடன் முதல் இடம் பிடித்தார்.
லங்கா பிரீமியர் லீக் இறுதிப்போட்டிக்கு பிறகு சமீத் ட்விட்டரில் பதிவிட்டதாவது, இன்றைய இரவு காலி அணி ரசிகர்களுக்கானது அல்ல.
ஜாப்னா அணி சிறப்பாக விளையாடியது. எனினும் இது ஒரு அற்புதனமான தொடராக இருந்தது.
இலங்கை அணியில் சில அற்புதமான வீரர்கள் உள்ளனர், அதில் குசால் மெண்டீஸ் மற்றும் குணதிலகா ஆவர்.
நாம் விரும்பிய படி கிரிக்கெட் இருக்காது. எனது விருப்பத்தின் படி, தொடரில் அதிக ரன் அடித்த குசால் தொடர் நாயகனாக இருந்திருக்க வேண்டும்.
மீண்டும் இலங்கை அணிக்காக விளையாட குசால் மெண்டீஸிற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுதி அளிக்க வேண்டிய நேரம் இது என சமீத் தெரிவித்துள்ளார்.
Cricket never works out the way you want it to. In my opinion @KusalMendis13 should have been player of the tournament highest run scorer. I think it’s time for @OfficialSLC to let him back playing again for his country.
— Samit Patel (@Samitpatel21) December 24, 2021
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக குசால் மெண்டீஸிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, அவர் அடுத்த ஜூன் மாதம் தான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.