22 அணுகுண்டுக்கு சமமான 'பொண்ணு' சிறுகோள் : பூமியை மோதுவதற்கு சாத்தியம் இருப்பதாக நாசா அறிவிப்பு!
சூரிய குடும்பத்தில் ஆயிரக்கணக்கான சிறுக்கோள்கள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை பூமியின் மேற்பரப்பில் மோதுவதுஅடிக்கடி நடக்கும் வானியல் நிகழ்வாகும்.
அந்தவகையில் 'பென்னு' என்ற சிறுகோள் பூமியை மிக அருகில் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி இருகின்றது.
'பென்னு' சிறுகோள்
பல நூறு ஆண்டுகளாக பூமிக்கு அருகில் சுற்றிவரும் பென்னு இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் மீது மோத வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த சிறுகோளானது பூமியின் மீது மோதினால் 20க்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் என்ன விளைவு ஏற்படுமோ அந்த அளவிற்கும் அதிகமாக தாக்கம் இருக்கும் என தெரிவித்துள்ளார்கள்.
இந்த விடயத்தை 1999 ஆண்டு நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆகவே இந்த சிறுக்கோளின் மாதிரியை எடுத்துக்கொண்டு அதில் என்ன மாதிரியான கனிமங்கள் இருகின்றது எனவும் அது பூமிக்கு வந்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என தெரிந்துக்கொள்வதற்காக 2016 ஆண்டு ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலம் விண்ணுக்கு அணுப்பப்பட்டது.
ஆராய்வதற்கு சென்ற விண்கலம்
2 ஆண்டுகளில் 2 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்து 2018 ஆம் ஆண்டு இந்த விண்கலமானது 'பென்னு' சிறுகோளை நெருங்கியது. அதன்படி சிறுகோளிலிருந்து 60 கிராம் முதல் 2 கிலோ வரையிலான மாதிரிகளை எடுத்துக்கொண்டு 2020 ஆண்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தது.
சிறுகோளின் மண் மாதிரிகள் அடங்கிய கொள்கலனை பூமியை நோக்கி விடுவித்தது.
அந்த கொள்கலன் விநாடிக்கு 12 கி.மீ. அதாவது மணிக்கு சுமார் 43,500 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி வந்தது.
பூமியை வந்தடைந்த ஆராய்ச்சி மண்
அமெரிக்காவின் யுட்டா மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த நிகழ்வானது இந்திய நேரப்படி இரவு 8.22 மணியளவில் நிகழந்துள்ளது.
பின் அங்கு இருந்த ஆய்வாளர்கள் அந்த கொள்கலனில் உள்ள மண்ணை ஆய்வு செய்ய தயாராகியுள்ளனர்.
Keegan Barber/NASA
பென்னு சிறுகோளின் மண் மாதிரிகள் அடங்கிய கொள்கலன் டெக்சாஸில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இந்த மாதிரியில் 4 சதவீத பங்கை கனடா விண்வெளி மையத்திற்கும் பூஜ்ஜியம் புள்ளி 5 சதவீத பங்கை ஜப்பான் விண்வெளி மையத்திற்கும் நாசா அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
பூமிக்கு பாதிப்பு இருக்குமா?
சூரிய குடும்பத்தில் இருக்கும் மிகவும் ஆபத்தான ஒரு பாறையாகக் பென்னு காணப்படுகின்றது. பூமியைத் தாக்குவதற்கான அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
ஆனால் பயப்பட வேண்டியது இல்லை. அது நிகழ்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. அடுத்த நூற்றாண்டின் பிற்பகுதி வரை எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.
மேலும் இந்த சிறுகோள் பூமியை மோதுவதற்கு இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேல் காலம் உள்ள நிலையில், இதன் பாதையில் இருந்து திசை திருப்புவதற்கான முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Today's #OSIRISREx asteroid sample landing isn't just the end of a 7-year, 3.9-billion-mile journey through space. It takes us 4.5 billion years back in time.
— NASA (@NASA) September 24, 2023
These rocks will help us understand the origin of organics and water that may have seeded life on Earth.… pic.twitter.com/sHLRrnWqAg
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |