இந்தியாவில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள நிவாரண நிதி வழங்க சாம்சங் முடிவு!
இந்தியா கொரோனா தொற்றை எதிர்கொள்ள 50 லட்சம் டாலர்களை வழங்க முடிவு செய்துள்ளதாக தென் கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது இந்திய மதிப்பில் ரூ. 37 கோடி ஆகும். இந்த தொகை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்கப்போவதாக முடிவு செய்துள்ளது.
இதன்படி அறிவிக்கப்பட்ட தொகையில் 30 லட்சம் டாலர்கள் மத்திய அரசு, உத்திர பிரதேசம் மற்றும் தமிழ் நாட்டிற்கும் மீதமுள்ள 20 லட்சம் டாலர்களை மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவைகளாக வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.
இத்துடன் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிக ஊழியர்களுக்கு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான செலவை ஏற்பதாகவும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.