Samsung Finance+ திட்டம்: தினசரி ரூ.33 EMI கட்டி ஸ்மார்ட்போன் வாங்க முடியும்
சம்சுங் நிறுவனம் தனது Finance+ திட்டத்தின் கீழ் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தினசரி ரூ.33 முதல் எளிய EMI திட்டத்தில் சம்சுங் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும்.
கூடுதலாக, ரூ.1000 வரை Cashback மற்றும் பல்வேறு நன்மைகளும் வழங்கப்படுகின்றன.
இந்த Finance+ திட்டம், வாடிக்கையாளர்களுக்கு வங்கி கடன் அல்லது கிரெடிட் கார்டு தேவையில்லாமல், நேரடியாக சாம்சங் Finance+ ஆப் மூலம் EMI வசதி பெறும் வாய்ப்பை வழங்குகிறது. EMI திட்டம் 12 மாதங்கள் வரை நீள்கிறது.

சம்சுங், “இந்த திட்டம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு எளிதான, சுலபமான, மற்றும் நம்பகமான நிதி உதவியை வழங்கும்” என தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள், Samsung Finance+ ஆப்பை பயன்படுத்தி, அருகிலுள்ள சம்சுங் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் இந்த சலுகையைப் பெறலாம்.
மேலும், EMI திட்டத்துடன் சேர்த்து, ரூ.1000 Cashback, சிறப்பு தள்ளுபடி, மற்றும் Samsung Care+ பாதுகாப்பு திட்டம் போன்ற கூடுதல் நன்மைகளும் வழங்கப்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |