Samsung Galaxy Unpacked 2025: புதிய ட்ரெண்டை உருவாக்கவுள்ள நிகழ்வு
சாம்சங் நிறுவனம் 2025-ஆம் ஆண்டிற்கான Galaxy Unpacked நிகழ்வை ஜூலை 9-ஆம் திகதி நியூயார்க் நகரில் நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“Ultra Unfolds” என்ற தீம் மூலம், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் புதிய டிரெண்ட் ஏற்படவிருக்கிறது.
இந்த நிகழ்வில், Galaxy Z Fold 7 மற்றும் Galaxy Z Flip 7 என இரு புதிய மடிக்கக்கூடிய மொடல்கள் அறிமுகமாகவுள்ளன.
இவை, மிக இலகுவாகவும், மேம்பட்ட One UI 8 வசதியுடன் கூடியதாகவும் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூடுதலாக, விலை குறைவான Galaxy Z Flip FE மொடலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், Galaxy Watch 8 தொடரில் Classic மற்றும் Ultra மாடல்கள் வெளியிடப்படவிருக்கின்றன. Galaxy Buds Core எனும் புதிய ஒலி சாதனமும் இதில் இடம் பெறும்.
இதற்கு மேலாக, Samsung-Google கூட்டணியில் உருவாகும் Project Moohan XR Headset மற்றும் உலகின் முதல் மூன்று மடிப்பு மொபைல் (tri-fold smartphone) குறித்து முன்னோட்டம் வழங்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
Galaxy AI தொழில்நுட்பம் இவற்றில் ஆழமான ஒருங்கிணைப்புடன் வரவுள்ளது. இதன் மூலம் சாம்சங், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களிலும், செயற்கை நுண்ணறிவிலும் புதிய வரலாற்றை உருவாக்கவுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Samsung Unpacked 2025, Galaxy Z Fold 7 specs, Galaxy Flip 7 launch date, Samsung tri-fold phone, Galaxy AI features, Galaxy Watch 8 Ultra, Galaxy Buds Core specs, Project Moohan XR headset, Samsung foldable launch 2025, AI smartphone launch 2025