ரூ.15,000-க்கு அறிமுகமாகி இருக்கும் Samsung Galaxy A05s: இதன் சிறப்பம்சங்கள் என்ன?
Samsung நிறுவனம் இந்தியாவில் Galaxy A05s என்ற புதிய பட்ஜெட் ஃபோனை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
விலை விவரம்
Samsung நிறுவனத்தின் புதிய Galaxy A05s variant-ன் விலை ரூ.14,999 ஆகும். எனினும் samsung நிறுவனம் SBI Bank Credit Card-களை பயன்படுத்தி ரூ.1,000 தள்ளுபடியில் சில அறிமுக சலுகைகளை அறிவித்துள்ளது.
இதன் மூலம் இந்த மொபைலை ரூ13,999-க்கு வாங்கலாம்.
இந்த மொபைலை Samsung-ன் பிரத்தியேக நிறுவனத்தின் அதிகாரபூர்வ websiteஆன Samsung.com மற்றும் பிற Online portals-ல் இந்த புதிய போனை வாங்கலாம்.
Camera அம்சங்கள்
Samsung Galaxy A05s மொபைல் high resolution கொண்ட 50MP Main shoot உடன், 2MP depth மற்றும் 2MP Camera கூடிய Triple camera set கொண்டுள்ளது.
இந்த மொபைலின் பின்பக்கத்தில் இருக்கும் Main camera குறைந்த ஒளி இருக்கும் போதும் கூட சிறந்த Photos-ஐ கிளிக் செய்ய உதவும்.
Selfie எடுக்க மற்றும் Video calls-க்கு மொபைலின் முன்பக்கத்தில் 13MP sensor பொருத்தப்பட்டு உள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்
இந்த மொபைல் Black, Light Green and Light Violet உள்ளிட்ட Color ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
Samsung நிறுவனத்தின் புதிய Galaxy A05s மொபைலானது 6GB Color+ 128GB Internal storage ஆப்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
புதிய Galaxy A05s 6.7 inch FHD+ Display-வை கொண்டுள்ளது. இது 90Hz Refresh rate கொண்டுள்ளது.
இந்த மொபைலின் முன்பக்கத்தில்punch hole notch-க்கு பதிலாக Teardrop notch உள்ளது.
மேலும் இந்த மொபைலின் பின்பக்கத்தில் Galaxy S23 சீரிஸில் இருப்பது போல Floating Camera system இருக்கிறது.
புதிய Galaxy A05s மொபைலில் Qualcomm Snapdragon 680 processor கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த செயல்திறனுக்காக 6GB RAM கொண்டுள்ளது.
இந்த மொபைல் சாம்சங்கின் One UI 5.1 interface உடன் Android 13-ல் இயங்குகிறது. Dual Nano SIM support கொண்டுள்ளது.
இந்த மொபைலில் 25W Charging support செய்யும் 5,000mAh Battery கொடுக்கப்பட்டுள்ளது. மொபைலின் மொத்த எடை 194g ஆகும்.
MicroSD card slot-ஐ பயன்படுத்தி Mobile storage 1TB வரை விரிவாக்கி கொள்ள முடியும்.
Connectivity-ஐ பொறுத்த Galaxy A05s மொபைல் 4G LTE, dual-band Wi-Fi, Bluetooth 5.1, Location Service களுக்கான GPS, 3.5mm Audio jack உள்ளிட்டவற்றை Support செய்கிறது மற்றும் USB Type-C port-ஐ கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |