சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி மாடல்சாம்சங் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்!
சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி மாடல்சாம்சங் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் SM-A526B/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் ஆசம் பிளாக், ஆசம் புளூ, ஆசம் வைலட் மற்றும் ஆசம் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
இதன் துவக்க விலை 429 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 38 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அந்தவகையில் தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி அம்சங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே
- 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்
- ஸ்னாப்டிராகன் 750G பிராசஸர்
- 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
- 64 எம்பி பிரைமரி கேமரா
- 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
- 5 எம்பி டெப்த் சென்சார்
- 5 எம்பி மேக்ரோ சென்சார்
- 32 எம்பி செல்பி கேமரா
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 25வாட் பாஸ்ட் சார்ஜிங்