இரு செல்பி கேமரா சென்சார்கள்! குறைவான எடை.. மிரட்டலான தோற்றத்தில் உருவாகும் Samsung மடிக்கக்கூடிய Smartphoneகள்
சாம்சங் அடுத்தாண்டு அறிமுகம் செய்ய இருக்கும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் சிறப்பான அம்சங்கள் குறித்து தெரியவந்துள்ளது.
அதன்படி இரு செல்பி கேமரா சென்சார்களுடன் இது வரவுள்ளது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 4 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மொடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் இசட் ப்ளிப் 3 மொடல்களை அறிமுகம் செய்தது. இரு மொடல்களும் சர்வதேச சந்தையில் அமோக வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், சாம்சங் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி இசட் போல்டு 4 மற்றும் இசட் ப்ளிப் 4 மொடல்களின் அம்சங்கள் புதிய கேலக்ஸி இசட் போல்டு 4 மொடலில் மேம்பட்ட அண்டர் டிஸ்ப்ளே கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் இரு செல்பி கேமராக்கள் வழங்கப்பட இருக்கின்றன. ஒரு சென்சார் டிஸ்ப்ளேவின் மேல் மற்றொரு சென்சார் டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
இதோடு புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மொடல்கள் எடை முன்பை விட குறைவாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.