மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விற்பனையில் அசுர வளர்ச்சி பெற்ற சாம்சங்! வெளியான புகைப்படங்கள்
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் விற்பனை அசுர வளர்ச்சியை கண்டுள்ளது. அதன்படி விற்பனையானது கடந்த ஆண்டை விட 4 மடங்கு அதிகரித்துள்ளது.
சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் சீரிஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை கடந்த ஆண்டை விட நான்கு மடங்கு அதிகரித்து இருக்கிறது.
இது முந்தைய கேலக்ஸி இசட் சீரிஸ், ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த விற்பனையாகும்.
இதுதவிர கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் பிளிப் 3 ஸ்மார்ட்போன்கள் முந்தைய ஆண்டை விட இருமடங்கு அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
கேலக்ஸி நோட் 20 மொடலுடன் ஒப்பிடும் போது கேலக்ஸி ப்ளிப் 3 மொடலை வாங்குவோர் எண்ணிக்கை 1.5 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.