சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் இந்த திகதியில் தான் அறிமுகம்!
இந்தியாவில் செப்டம்பர் 28 ஆம் திகதி சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என அமேசான் தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய கேலக்ஸி எம்52 5ஜி மாடல் 7.2 எம்.எம். அளவில் உருவாகி உள்ளது.
இந்த மாடல் குறைந்த எடையில், அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கும் என அமேசான் வெளியிட்ட டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி மாடலில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், மூன்று கேமரா சென்சார்கள், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.1 ஓ.எஸ்., யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது .