விரைவில் களமிறங்க இருக்கும் Samsung Galaxy S24 Series: வெளியீட்டு தேதி, சிறப்பம்சங்கள் இதோ
Samsung Galaxy S24 Series அடுத்த ஆண்டு ஜனவரி 17-ல் சான் ஜோஸ் என்ற இடத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் Samsung Galaxy S24 Series-ல் Galaxy S24, Galaxy S24+ மற்றும் Galaxy S24 Ultra உள்ளிட்ட மூன்று மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி 26 - 30 தேதிகளுக்கு இடையில் Galaxy S24 Series ஸ்மார்ட்ஃபோன்கள் வெளியிடப்படும் என்றும், ஜனவரி 30-க்கு மேல் ஓபன் சேல் தொடங்கும் என்றும் வெளியீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்
Samsung Galaxy S24 Series-ல் மற்ற வேரியன்ட்ஸ்களை விட பலரும் Galaxy S24 Ultra மாடலை ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த Smartphone-ல் 6.8-inch QHD+ Dynamic AMOLED LTPO Display இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த Display ஈர்க்கக்கூடிய 1200-nit Peak Brightness உடன் 120Hz Refresh rate கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
முக்கியமாக S24 Ultra மொபைலில் Frame material-லில் மாற்றங்கள் இருக்கும் என்று பல தகவல்கள் அடித்து கூறுகின்றன.
Galaxy S23 Ultra-வில் Aluminum frame கொடுக்கப்பட்ட நிலையில் வரவிருக்கும் S24 Ultra -வில் Titanium frame கொடுக்கப்படும் என பல அறிக்கைகள் குறிப்பிட்ட்டுள்ளன.
ரூ.75,000 மதிப்புள்ள Samsung Galaxy Smartphone வெறும் ரூ.10,000 மட்டுமே: Flipkart-ன் தள்ளுபடி விலையில்
செயல்திறனை பொறுத்தவரை குவால்காம் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய Snapdragon 8 Gen3 Chipset Processor மூலம் இந்த மொபைல் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
அதே போல வரவிருக்கும் Samsung Galaxy S24 Ultra மாடலானது 200MP Primary sensor+12MP+50MP+ 10MP என்ற Quad camera setup-ஐ பெறலாம்.
மேலும் முன்பக்கம் 12MP Selfie camera கொடுக்கப்படலாம். அதேபோல் S24 Ultra-வில் 5000mAh Battery கொடுக்கப்படலாம்.
அதேசமயம் S24 Plus மற்றும் S24 ஆகியவை 4900mAh Battery-ஐ பெறலாம்.
மேலும் S24 Ultra Mobile Android 14 அடிப்படையிலான One UI 6-ல் இயங்கும் மற்றும் 45W Charging-ஐ Support செய்யும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |