AI அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ்: வெளியீட்டு திகதி, விலை, சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸை முந்தும் அளவிற்கு சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
வெளியிட்டு திகதி எப்போது
2024ம் ஆண்டு ஜனவரி 18ம் திகதி சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் அதன் புதிய எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியீடும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
அவ்வாறு பெரும் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்24 சீரீஸில், 3 முக்கியமான ஸ்மார்ட் போன்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24), சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Samsung Galaxy S24 Plus), சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள் என்ன?
சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் புதிய செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் சாம்சங் கேலக்ஸி எஸ்24 தொடர்பான டீசரில் கூகுள் பார்ட் ஏஐ ஆகியவற்றை காண முடிந்தது.
மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன் புதிய சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை கொண்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸில் முக்கிய மாற்றங்களை கொண்டு இருக்கும் என தெரியவருகிறது.
அதனடிப்படையில் 200MB Main Camera + 12MB சென்சார் + 50MB சென்சார் + 10MB சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா செட்டப்புடன், முன்பக்கத்தில் 12Mb செல்பி கேமராவும் கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டரி திறனை பொறுத்தவரை 45W பாஸ்ட் சார்ஜிங் திறனுடன் உடனான 5000mAh பேட்டரி இடம்பெறலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை
சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24) = ரூ. 74, 999
சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Samsung Galaxy S24 Plus) = ரூ.94,999.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) = ரூ. 1, 24, 999க்கு அறிமுகமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |