அசத்தல் Samsung Galaxy S24 Ultra: நிறைகள் மற்றும் குறைகள் என்னென்ன?
பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளிவந்து இருக்கும் சாம்சங் நிறுவனத்தின் Samsung Galaxy S24 Series ஸ்மார்ட்போனில் உள்ள நிறை மற்றும் குறைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy S24 Series
சாம்சங் நிறுவனம் அதன் பிளாக்ஷிப் மாடலாக Galaxy S24 Ultra, Galaxy S24+ ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.80,000 முதல் ₹ 1,59,999 வரை விற்பனை செய்ய இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chat Assist, AI Photo Assist, cIrcle To Search, Note Assist, Language Translation ஆகிய பல்வேறு அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
நிறைகள்
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்-ஐ (iPhone 15 Pro Max ) தொடர்ந்து Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட்போனிலும் டைட்டானியம் (titanium Body) வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்முலம் ஸ்மார்ட்போன் சேதமடைவதில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. புதிய கார்னிங் கொரில்லா ஆர்மர் கிளாஸ் அதிக கீறல் எதிர்ப்பு கொண்டதாக Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட்போனை மாற்றுகிறது.
Circle to Search அம்சத்தின் மூலம் நமக்கு தேவையான விவரத்தை சம்பந்தப்பட்ட புகைப்படத்தின் மீதோ அல்லது வீடியோ மீதோ திரையில் வட்டமிடுவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
AI Photo Assist அம்சம் உங்களின் புகைப்படங்களின் தரத்தை உயர்த்துவதோடு, பின்புறத்தில் உள்ள தேவையற்ற விவரங்களை நேர்த்தியாக நீக்கி விடுகிறது.
AI போன்ற பல்வேறு அம்சத்துடன் Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட்போன் வெளி வந்து இருந்தாலும், 5000mah பேட்டரி திறன் சிறப்பான செயல்பாட்டை கொண்டுள்ளது.
200mb மெயின் கேமராவுடன் வெளிவந்துள்ள அருமையான கேமரா குறைந்த வெளிச்சத்தில் சிறப்பான திறனை வெளிப்படுத்துகிறது.
7 ஆண்டுகள் வரை ஆண்ட்ராய்டு மென்பொருள் மேம்படுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் Samsung Galaxy S24 Ultra சிறந்த மென்மையான செயல்திறனை கொண்டுள்ளது.
குறைகள்
Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து AI அம்சங்களும் பிரத்தியேகமானவை அல்ல, இன்னும் மேம்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
பல்வேறு சிறப்பான அம்சங்கள் கொடுக்கப்பட்டு இருந்தாலும், Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட்போனின் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |