ஆப்பிள் ஐபோனுக்கு பிறகு…சாம்சங் ஸ்மார்ட்போன் குறித்து கசிந்த முக்கிய தகவல்
சாம்சங் புதிதாக வெளியிட இருக்கும் கேலக்ஸி S24 அல்ட்ரா டிசைன் மாடல் குறித்த முக்கியமான தகவல்கள் கசிந்துள்ளது.
சாம்சங் குறித்து லீக்கான தகவல்
சாம்சங் நிறுவனம் தங்களுடைய அல்ட்ரா டிசைன் மாடலான கேலக்ஸி S24 சீரிஸ் மாடல்களை அடுத்த ஆண்டு ஜனவரி 24ம் திகதி அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக அடுத்த ஆண்டுக்கான சாம்சங்-கின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விவரங்களை அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் தான் அறிமுகம் செய்யும்.
ஆனால் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S24 அல்ட்ரா டிசைன் மாடல் குறித்த முக்கிய தகவல் கசிந்துள்ளது
ஆப்பிளை தொடர்ந்து சாம்சங்
கடந்த செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் டைட்டானியம் ஃபிரேம்களை முதல் முறையாக ஐபோன் 15 ப்ரோ மாடலில் அறிமுகப்படுத்தியது.
இதனை தொடர்ந்து சியோமி நிறுவனம் தன்னுடைய டைட்டானியம் ஸ்பெஷல் எடிசனான சியோமி 14 ப்ரோவை அறிமுகப்படுத்தியது.
இந்த வரிசையில் தற்போது சாம்சங் நிறுவனமும் தன்னுடைய கேலக்ஸி S24 அல்ட்ரா டிசைன் மாடலில் டைட்டானியம் ஃபிரேம்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இதற்காக 15 மில்லியன் டைட்டானியம் ஃபிரேம்களை உருவாக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |