ஜூலையில் வெளியாகும் Samsung Galaxy Z Fold 7 மற்றும் Z Flip 7
சம்சுங் (Samsung) நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் வரிசையில் அடுத்த பெரும் முன்னேற்றமாக Galaxy Z Fold 7 மற்றும் Galaxy Z Flip 7 ஸ்மார்ட்போன்கள் ஜூலை 2025ல் வெளியீடு செய்யப்படவுள்ளன.
இந்த "Unpacked" நிகழ்வு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜூலை 2 அல்லது 9-ஆம் திகதி நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Galaxy Z Fold 7 மொடல் 8 இன்ச் உட்புற திரை மற்றும் 6.5 இன்ச் வெளிப்புற திரையை கொண்டிருக்கும். அதில் Snapdragon 8 Elite புராசஸர் மற்றும் Android 15 இயங்குதளம் மூலம் பல்துறை செயல்பாடுகளில் மேம்பாடு காணப்படும்.
நீடித்த பயன்பாட்டிற்கான தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு வசதிகளும் வழங்கப்படும். புதிய Selfie கேமரா தொழில்நுட்பமும் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Galaxy Z Flip 7 சிறியதாயினும் சக்திவாய்ந்த மொடலாகும். மேம்பட்ட ஹிஞ்ச் வடிவமைப்பு, சிறந்த பேட்டரி தாங்கும் திறன் மற்றும் மெல்லிய வடிவமைப்புகள் இதில் முக்கிய அம்சங்கலாகும். இது ஸ்டைல் மற்றும் செயல்திறனின் சிறந்த இணைப்பாகும்.
மேலும் Galaxy Z Flip FE எனப்படும் மொடல் மற்றும் புதிய Galaxy Watch மற்றும் Android அடிப்படையிலான XR ஹெட்ஸெட்கள் உள்ளிட்ட கூடுதல் சாதனங்களும் அறிமுகம் செய்யப்படலாம்.
இது சம்சுங் நிறுவனத்துக்கு மடிக்கக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாடடு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Samsung Galaxy Z Fold 7 launch 2025, Galaxy Z Flip 7 specifications, Samsung Unpacked July 2025, Foldable phones 2025 release, Samsung foldables new features, Snapdragon 8 Elite Samsung phone, Galaxy Z Flip 7 battery life, Android 15 foldable phone, Samsung tri-fold phone rumor, Galaxy Watch July 2025 launch, Samsung XR headset preview