Samsung வெளியிட்ட Galaxy Z Flip7 Olympic Edition மொபைல்
சம்சுங் தனது புதிய Galaxy Z Flip7 Olympic Edition ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது 2026-இல் நடைபெறவுள்ள மிலானோ-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பதிப்பு, ஒலிம்பிக் வீரர்களின் முழு பயணத்தையும் ஆதரிக்க உருவாக்கப்பட்டுள்ளது.
International Olympic Committee (IOC) உடன் இணைந்து வெளியிடப்பட்ட இந்த மொபைல், ஒலிம்பிக் லோகோ மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வருகிறது.

Galaxy Z Flip7 Olympic Edition, Samsung Health, Smart Training Tools, மற்றும் AI அடிப்படையிலான Fitness Tracking வசதிகளை கொண்டுள்ளது. இதன் மூலம், வீரர்கள் தங்கள் உடல் நிலை, பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தை எளிதில் கண்காணிக்க முடியும்.
மேலும், சம்சுங், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் இந்த ஸ்மார்ட்போனை இலவசமாக வழங்குகிறது.
Samsung Galaxy Olympic Partnership திட்டத்தின் கீழ், வீரர்கள் போட்டி காலத்தில் தனிப்பட்ட ஆதரவு மற்றும் டிஜிட்டல் சேவைகளையும் பெறுவார்கள்.

Samsung உலகளாவிய ஒலிம்பிக் கூட்டாண்மையில் 1988 முதல் பங்குபெற்று வருகிறது. இந்த புதிய வெளியீடு, “வீரர்களின் கனவுகளை தொழில்நுட்பத்தின் மூலம் ஆதரிப்பது” என்ற சாம்சங் நோக்கத்தை வலியுறுத்துகிறது.
இந்த அறிவிப்பு, 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, உலகளாவிய விளையாட்டு மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Samsung Galaxy Z Flip7 Olympic Edition, Galaxy Z Flip7 Milano Cortina 2026, Samsung Olympic smartphone 2026, Galaxy Z Flip7 features athletes, Samsung Galaxy Z Flip7 specs, Samsung Olympic partnership 2026, Galaxy Z Flip7 exclusive edition, Samsung Galaxy Z Flip7 release date, Galaxy Z Flip7 Olympic design, Samsung Galaxy Z Flip7 news