சாம்சங் கேலக்ஸி எஸ் 23 சீரிஸ் போன்கள் அறிமுகம்: பிரம்மாண்ட கேமரா உடன் விரைவில் விற்பனை
முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் பிப்ரவரி 1- ம் திகதி கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வில் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் போன்களை வெளியிடும் என்று சாம்சங் கொலம்பியா இணையதளம் உறுதிப்படுத்தியுள்ளது.
கேலக்ஸி எஸ்23 சீரிஸ்
சாம்சங் நிறுவனத்தின் கொலம்பியா இணையதளம் பிப்ரவரி 1- ம் திகதி கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வில் தங்களது கேலக்ஸி எஸ்23 சீரிஸ் போன்களை வெளியிடும் என தெரிவித்துள்ளது.
இதில் முதற்கட்டமாக 2 வகையான போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, ட்ரிபிள் கேமரா வசதியுடன் வெளிவரும் இந்த இரண்டு போன்களும் காட்டன் ஃப்ளவர், மிஸ்டி லிலாக், பொட்டானிக் கிரீன் மற்றும் பாண்டம் பிளாக் ஆகிய நான்கு நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.
கேமரா
கேலக்ஸி எஸ் 23 மற்றும் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா ( Galaxy S23 Ultra) ஆகிய இரண்டு போன்களும் வெளிவர இருக்கும் நிலையில், கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா போனில் 12MP அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் இரண்டு 10MP டெலிஃபோட்டோ சென்சார்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
அத்துடன் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா 200MP கேமரா பேக் உடன் வரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா பாக்ஸ் போன்ற தோற்றமும், கேலக்ஸி எஸ் 23 போன் வட்ட வடிவிலான கார்னர் தோற்றமும் கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது.
This may be it:
— SnoopyTech (@_snoopytech_) January 5, 2023
Cotton Flower
Misty Lilac
Botanic Green
Phantom Black pic.twitter.com/bnRVIb5ZhI