சாம்சங் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை! இந்த ஆபத்து உள்ளது
சாம்சங் நிறுவனத்தின் பிரபலமான சில ஸ்மார்ட்போன்கள் சந்திக்கும் தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து தெரியவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு 9, 10,11 மற்றும் சமீபத்தில் வெளியான ஆண்ராய்டு 12-ல் இயங்கும் சாதனங்கள் இந்த பிரச்சனையை சந்தித்துள்ளன.
அதன்படி சாம்சங் எஸ் 21 அல்ட்ரா 5ஜி: ஆண்ட்ராய்டு 12 சாம்சங் எஸ் 21 அல்ட்ரா 5ஜி: ஆண்ட்ராய்டு 11 சாம்சங் எஸ்10+: ஆண்ட்ராய்டு 10, சாம்சங் ஏ10இ: ஆண்டராய்டு 9 ஆகிய போன்கள் இந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
இதன்மூலம் சாம்சங்போன் எந்த 3ம் நபர் செயலிகளுக்கும் கட்டளையிடுவதற்கு அனுமதி வழங்குவதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு மூன்றாவது நபர் செயலி பயனர்களின் அனுமதி இல்லாமலேயே ஃபேக்டரி ரீசெட், அழைப்புகள் உள்ளிட்ட செயல்களை செய்வதற்கு சாம்சங் ஸ்மார்ட்போன் அனுமதி அளிக்கிறது.
இதன்மூலம் ஒரு ஹேக்கர் செயலியை உருவாக்கியிருந்தால் அவரால் சாம்சங் ஸ்மார்ட்போனை எளிதாக கட்டுப்படுத்த முடியும். நமது தகவல்களை டெலிட் செய்யமுடியும் என கூறப்படுகிறது.