மூன்றாக மடிக்கக்கூடிய Samsung மொபைல் இம்மாத இறுதியில் அறிமுகம்
Samsung-ன் மூன்றாக மடிக்கக்கூடிய மொபைலான Galaxy Z TriFold மொடல் இம்மாதம் (அக்டோபர்) அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Gyeongju நகரில் நடைபெறவுள்ள APEC மாநாட்டின் போது (அக்டோபர் 31- நவம்பர் 1) இந்த மொபைல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Huawei போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே மூன்றாக மடிக்கக்கூடிய மொபைல்களை சீனா மற்றும் தென் கொரியாவில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், Samsung இந்த மாடலை உலக சந்தைக்கு கொண்டு வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
கடந்த ஆண்டு Galaxy Z Fold SE மொடல் தென் கொரியா மற்றும் சீனாவில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் சிறப்பம்சங்கள் பின்னர் உலகளாவிய Galaxy Z Fold 7-இல் இடம்பெற்றன.
Galaxy Z Fold 7 மொடல் 50 சதவீதம் அதிக விற்பனையைப் பெற்றுள்ள நிலையில், புதிய TriFold மொடல் உலக சந்தைக்கு வரலாம் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. Galaxy S Ultra மொடலிலிருந்து 30 சதவீத பயனர்கள் Fold 7-க்கு மாறியுள்ளனர்.
TriFold மொபைல் 9.96 இன்ச் பிரதான திரை மற்றும் 6.49 இன்ச் கவர் திரையுடன் வருகிறது.
Qualcomm Snapdragon 8 Elite chipset, 16GB RAM, titanium மற்றும் aluminum frame ஆகியவை இதில் இடம்பெறலாம். Under-display camera-ஐ தவிர்த்து punch-hole வடிவமைப்பை Samsung தேர்ந்தெடுக்கலாம். Battery life மற்றும் charging வேகம் குறித்து இன்னும் உறுதியான தகவல் இல்லை.
இந்த மொபைல் Samsung நிறுவனத்தின் மிக எதிர்பார்க்கப்படும் மொடல்களில் ஒன்றாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |