உலகின் முதல் AI Laptop., டிசம்பர் 15 சந்தையில் அறிமுகப்படுத்தும் Samsung
Samsung நிறுவனம் உலகின் முதல் AI Laptopஐ டிசம்பர் 15-ஆம் திகதி அறிமுகப்படுத்துகிறது.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் உலகளவில் விரிவடைந்து வருகிறது. மின்னணு சாதனங்களில் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த வரிசையில் தென்கொரியாவின் பிரபல எலக்ட்ரானிக் நிறுவனமான Samsung புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறது. இது உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மடிக்கணினி (World's First AI Laptop) என அழைக்கப்படுகிறது.
இந்த லேப்டாப் Samsung Galaxy Book 4 என்ற பெயரில் டிசம்பர் 15ஆம் திகதி உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. எனினும், இந்திய சந்தைக்கு எப்போது கொண்டு வரப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த லேப்டாப்பின் சிறப்பம்சங்களை பொறுத்த வரையில், இதில் Intel Core Ultra 7 155H processor இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லேப்டாப் மிக வேகமான செயல்திறனுடன் செயல்படுகிறது. இண்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பல விடயங்களைச் செய்ய முடியும் என்பது இந்த லேப்டாப்பின் சிறப்பு.
Samsung Galaxy Book 4 லேப்டாப் Samsung Gauss எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும். இந்த மடிக்கணினியில் CPUவில் Neural Processing Unit (NPU) நிறுவப்பட்டுள்ளது. இதனால் AI வேகமாக வேலை செய்யும் என கூறப்படுகிறது.
இது 32 GB of RAM மற்றும் 1TB வரை on-board storage கொண்டிருக்கலாம். கிராபிக்ஸ், தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களைப் பொறுத்து NVIDIA GeForce RTX 4050 GPU இடம்பெறும் என்று கூறப்படுகிறது. Galaxy Book 4 series குறித்த முழு விவரங்களையும் Samsung நிறுவனம் விரைவில் அறிவிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Samsung Worlds First AI Laptop, World's First AI Laptop, Samsung Galaxy Book 4 Series, Samsung Galaxy Book 4 Laptop