நீங்கதான் அம்பானி குடும்பமாச்சே! பகிரங்க மன்னிப்பு கேக்கணும் - சமுத்திரக்கனி மீண்டும் ஆவேசம்
அமீரை தவறாக பேசிய ஞானவேல் ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் சமுத்திரக்கனி மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஞானவேல் ராஜா வருத்தம்
திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விடயம், பருத்திவீரன் படம் தொடர்பில் ஞானவேல் ராஜா இயக்குநர் அமீர் மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டியதும், அதற்கு இயக்குநர் மற்றும் நடிகர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் மற்றும் கரு.பழனியப்பன் கண்டனம் தெரிவித்ததும் தான்.
இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் 'நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.
சமுத்திரக்கனி ஆவேசம்
இந்த நிலையில் இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி மீண்டும் ஆதங்கமாக அறிக்கை ஒன்றை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது அறிக்கையில்,
'பிரதர்...இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது... நீங்க செய்ய வேண்டியது., எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ...அதே பொது வெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..!' என தெரிவித்துள்ளார்.
அறம் வெல்லும்… வெல்வோம் pic.twitter.com/0NiNIomJTx
— P.samuthirakani (@thondankani) November 30, 2023
மேலும் அந்த அறிக்கையில், 'நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைத்தளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்...! பருத்திவீரன் திரைப்படத்தில் வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்...அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க...நீங்கதான், ''அம்பானி பேமிலியாச்சே..!'' காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி..!' என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |