53 பந்தில் 101 ரன்! அடித்து நொறுக்கிய வீரர்..வெளியேறிய டு பிளெஸ்ஸிஸ் அணி
டெக்சாஸ் அணிக்கு எதிரான போட்டியில் சான் பிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டல்லாஸில் நடந்த மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சான் பிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய சான் பிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியில் ஜாக் பிரேசஸ் (18), சஞ்சய் (0) ஆட்டமிழக்க ஃபின் ஆலன் ருத்ர தாண்டவம் ஆடினார்.
சிக்ஸர், பவுண்டரிகள் என தெறிக்கவிட்ட ஃபின் ஆலன் (Finn Allen) 53 பந்துகளில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் குவித்தார்.
Cometh the hour, cometh the man ?@Stake MVP Finn Allen stands up for the San Francisco Unicorns in the Challenger Play-Off, taking his side to the Championship ?#StakeMVP | #MLC2024 |#CognizantMajorLeagueCricket | #T20 | #TSKvSFU pic.twitter.com/JVpQKzngpb
— Major League Cricket (@MLCricket) July 27, 2024
ஜோஷ் இங்கிலிஷ் 25 பந்துகளில் 37 ஓட்டங்களும், ஹசன் கான் 15 பந்துகளில் 27 ஓட்டங்களும் எடுக்க, சான் பிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் (San Francisco Unicorns) அணி 6 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் குவித்தார். நூர் அகமது 3 விக்கெட்டுகளும், ஸ்டோய்னிஸ், பார்ட்மேன் மற்றும் மொஹ்சின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (Texas Super Kings) 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. டெவன் கான்வே (Devon Conway) 38 பந்துகளில் 62 ஓட்டங்களும், ட்ரோம்ப் 36 பந்துகளில் 56 ஓட்டங்களும் விளாசினர்.
வெற்றி பெற்ற சான் பிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நாளை நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை சான் பிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் எதிர்கொள்கிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |