ஏன் ஒருபக்கமாக இருக்கிறீர்கள்? கலாஷேத்ராவுக்கு ஆதரவு தெரிவித்த அபிராமிக்கு தமிழ்ப்பட நடிகை பதிலடி!
கலாஷேத்ராவுக்கு ஆதரவாக நடிகை அபிராமி பேசிய நிலையில், அவருக்கு மற்றொரு நடிகையான சனம் ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை அபிராமி ஆதரவு
சமீபத்தில் சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நான்கு பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கலாஷேத்ராவின் முன்னாள் மாணவியான அபிராமி வெங்கடாச்சலம் பேராசிரியர் ஹரி பத்மன் மற்றும் கலாஷேத்ராவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
அவர், '80 வருட பாரம்பரிய மிக்க கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி என்ற வகையில் அங்கு எந்த விதமான தவறும் நடந்துருக்க வாய்ப்பில்லை' என்று கூறியிருந்தார். அபிராமி வெங்கடாசலத்தின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
பிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி கேள்வி
இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும், நடிகையுமான சனம் ஷெட்டி தனது கருத்தினை அபிராமி எதிராக தெரிவித்துள்ளார்.
கலாஷேத்ரா விவகாரம் தொடர்பில் அவர் கூறுகையில், ’ஆணவம் மற்றும் அறியாமையான பேச்சு, பேச விருப்பமில்லை என்றால் பேசாமல் இருங்கள். உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்றால் அது அவர்களுக்கு நடக்கவில்லை என்று அர்த்தம் இல்லை.
89 வருடங்களாக நீங்கள் அந்த கல்லூரியில் இருந்தீர்களா? அங்குள்ள ஒவ்வொரு ஆசிரியரின் ஒவ்வொரு செயலுக்கும் உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா? நீங்கள் ஏன் ஒரு பக்கம் மட்டும் இருக்கிறீர்கள்? உண்மைக்காக காத்திருங்கள்’ என தெரிவித்துள்ளார்.