த்ரிஷாவுடன் ஒன்றாக வந்த விஜய் - ஆதங்கத்தை வெளிப்படுத்திய விஜய் ஆதரவு நடிகை
த்ரிஷாவுடன் ஒன்றாக விஜய் வருகை தந்ததற்கு விஜய் ஆதரவு நடிகை ஒருவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒன்றாக வந்த விஜய் திரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, தீவிர அரசியலில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்புள்ளதாக கூறி, அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், நடிகை த்ரிஷாவுடன் விஜய் ஒன்றாக திருமண நிகழ்வில் கலந்து கொண்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண விழாவிற்கு விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஒரே நிறத்தில் ஆடைகள் அணிந்து, ஒரே காரில் வந்து திருமண விழாவில் பங்கேற்றுள்ளனர்.
விஜய் ரசிகர்கள் பலருமே தேர்தல் நேரத்தில் இது போன்ற சர்ச்சைகளில் சிக்க வேண்டாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் திரிஷா ஒன்றாக வந்தது குறித்து நடிகை சனம் ஷெட்டி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இது சரியானது இல்லை. மனைவியின் துயரத்தை புறக்கணிக்க கூடாது. ஒரு நீண்ட கால ரசிகையாக இதனை பார்ப்பது ஏமாற்றமளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
NO!
— Sanam Shetty (@ungalsanam) March 5, 2026
This is not the way ❌
Grief of the wife cannot be ignored like this!
As a long time fan its deeply disappointing to watch at this time! @actorvijay @TVKVijayHQ https://t.co/Q9ugqzxlwM
விஜய்யின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த நடிகை சனம் ஷெட்டி, ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். சமீபத்தில் பிக்பாஸ் ஜுலி விஜய்க்கு எதிராக பேசியபோதும் சனம் ஷெட்டி பதிலடி கொடுத்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |