சமீபத்தில் பார்த்த பரபரப்பான ஆட்டம்! இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூரியா
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றுள்ளது
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி சமீபத்தில் பார்த்த பரபரப்பான ஆட்டம் - சனத் ஜெயசூரியா
உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி சமீபத்தில் தான் பார்த்த பரபரப்பான ஆட்டம் என சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. மெல்போர்னில் நடந்த இந்தப் போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது.
இருநாட்டு ரசிகர்களும் நகத்தை கடித்தப்படி இறுதிவரை போட்டியை கண்டு களித்தனர். பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 160 ஓட்டங்கள் இலக்கை, இந்திய அணி கடைசி பந்தில் எட்டி த்ரில் வெற்றி பெற்றது. சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்ட விராட் கோலி 82 ஓட்டங்கள் விளாசினார்.
AFP
கோலியின் ஆட்டத்தை பல கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து கருத்து பதிவிட்டுள்ளார்.
Dinuka Liyanawatte/Reuters
அவரது பதிவில், 'சமீப காலங்களில் மிகவும் பரபரப்பான ஆட்டங்களில் ஒன்று. மாஸ்டர் கிளாஸான ஆட்டத்தினை கோலி வெளிப்படுத்தினார். இதனால் தான் நாங்கள் கிரிக்கெட்டை விரும்புகிறோம்' என தெரிவித்துள்ளார்.