கோட்டாபய அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த சனத் ஜெயசூர்யா! வைரலாகும் புகைப்படம்
இலங்கையில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சனர் ஜெயசூர்யா ஈடுபட்டுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதையடுத்து, மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 31ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனர் ஜெயசூர்யா, இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிரித்தானியா, சுவிஸ் உட்பட பல்வேறு நாடுகளுக்கு எதிராக ரஷ்ய நடவடிக்கை! புடின் ஆணை
கையில் பதாகை ஒன்றை ஏந்திய படி ஜெயசூர்யா போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஜெயசூர்யா கையில் ஏந்தியிருந்து பதாகையில், அடுத்த தலைமுறைக்காக இலங்கையை காப்பாற்ற வேண்டும், அதுமட்டுமன்றி #GOHOMEGOTA #CORRUPTEDPOLITICS எனவும் எழுத்தப்பட்டிருந்தது.
ஏப்ரல் 1ம் திகதி இலங்கை நெருக்கடி குறித்து சனத் ஜெயசூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.