டி20 உலகக்கோப்பை! முதல் போட்டியில் தோற்ற இலங்கை.. ஜாம்பவான் ஜெயசூர்யா சொன்ன வார்த்தைகள்
டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கை தோற்றது குறித்து ஜெயசூர்யா கருத்து.
மீண்டும் ஒருங்கிணைத்து வெற்றி பெறுவோம் என அணி வீரர்களுக்கு கொடுத்த ஊக்கமான வார்த்தைகள்.
உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணி தோற்ற நிலையில் அது குறித்து ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா கருத்து தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நமீபியா அணியிடம் 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து அந்த அணியின் சூப்பர் 12 சுற்று கனவு கேள்விக்குறியாகியுள்ளது.
இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா, ஏமாற்றமான முடிவு. இருப்பினும், இந்த அணி ஏற்கனவே தோல்வியில் இருந்து மீண்டுள்ளது.
aajtak
இங்கிருந்து மீண்டும் ஒருங்கிணைத்து வெற்றி பெறுவோம், தகுதி பெறுவதே முதல் இலக்கு என இலங்கை அணி வீரர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
Disappointing result. However, this team has come back from defeat before. Let’s regroup and win from here first target is to qualify. Come on boys let’s do this !
— Sanath Jayasuriya (@Sanath07) October 16, 2022