எந்த கேப்டனோ, பயிற்சியாளரோ சூப்பர் ஓவரை விரும்புவதில்லை: துரதிர்ஷ்டவசமாக..சனத் ஜெயசூரியா
இந்திய அணிக்கு எதிரான தோல்வி குறித்து இலங்கையின் பயிற்சியாளர் சனத் ஜெயசூரியா கருத்து தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஓவர்
துபாயில் நடந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 203 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கையும் 202 ஓட்டங்கள் குவித்தது.
இதனால் போட்டி டை ஆக சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்திய அதில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வி குறித்து இலங்கை அணியின் பயிற்சியாளர் சனத் ஜெயசூரியா கருத்து தெரிவித்துள்ளார்.
ஒருபோதும் எளிதானது அல்ல
அவர் கூறுகையில், "எந்த கேப்டனோ அல்லது பயிற்சியாளரோ சூப்பர் ஓவருக்கு செல்ல விரும்புவதில்லை. துரதிர்ஷ்டவசமாக தசுன் 3வது ஓட்டத்தை முடக்கத் தவறிவிட்டார். ஆனால், இந்தியாவுக்கு எதிராக எந்த மனத்தடையும் இல்லை.
எங்கள் துடுப்பாட்ட வரிசை வலுவானது.
நாங்கள் அவர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளோம். 200 (203) ஓட்டங்களைத் துரத்துவது ஒருபோதும் எளிதானது அல்ல.
ஆனால் நாங்கள் அதை கிட்டத்தட்ட செய்தோம். இது எங்கள் தரத்தைக் காட்டுகிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |