இங்கிலாந்து மண்ணில் படுதோல்வியடைந்த இலங்கை அணி! ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா வேதனையுடன் வெளியிட்ட பதிவு
இலங்கை கிரிக்கெட் அணியின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா வேதனை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து இலங்கை அணி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக வென்றுள்ளது.
Very sad day for Sri Lankan cricket. The situation is critical. We need immediate measures to save cricket
— Sanath Jayasuriya (@Sanath07) June 27, 2021
இலங்கை அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவது கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
இலங்கை அணியின் இந்த மோசமான செயல்பாடு குறித்து ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா வேதனை தெரிவித்துள்ளார்.
அவரின் டுவிட்டர் பதிவில், இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகவும் சோகமான நாள்.
நிலைமை சிக்கலாக உள்ளது.
கிரிக்கெட்டைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கைகள் தேவை என பதிவிட்டுள்ளார்.