போராட்டக்காரர்களைத் தாக்குவதற்கு முன் முதலில் உங்கள் அலுவலகத்திற்கு குண்டர்கள் வந்தனர்! சங்ககார கொந்தளிப்பு
கொழும்பில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மகிந்த தனது டிவிட்டர் பக்கத்தில் “நமது பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் மற்றும் வன்முறை வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ” என டிவிட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த டிவிட்டர் பதிவிற்கு கீழாக குமார் சங்கார அவர்கள் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, அமைதியான போராட்டக்காரர்களைத் தாக்குவதற்கு முன் முதலில் உங்கள் அலுவலகத்திற்கு குண்டர்கள் வந்தனர். உங்கள் ஆதரவாளர்களால் மட்டுமே வன்முறை செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
The only violence was perpetrated by your “supporters” - goons and thugs who came to your office first before going on to assault the peaceful protestors. https://t.co/MxrCgcenEl
— Kumar Sangakkara (@KumarSanga2) May 9, 2022