வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துக்கள்! மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்: கலங்கிய இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக வரலாற்று வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு, முன்னாள் ஜாம்பவான் வீரர் சனத் ஜெயசூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி தனது சொந்த மண்ணில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளதற்கு, கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கொழும்பில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
Photo Credit: Getty Images
முன்னாள் ஆல்ரவுண்டர் வீரரான ருசல் அர்னால்ட், இலங்கை அணி மற்றும் அதிரடியில் மிரட்டிய அசலங்காவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சனத் ஜெயசூர்யா உணர்ச்சிவசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் '30 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமான தொடரை வென்ற இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்! இது ஒரு உண்மையான குழுவின் முயற்சி. சிறப்பாக முடித்துள்ளீர்கள் வீரர்களே! மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்' என தெரிவித்துள்ளார்.
Congratulations to the victorious Sri Lankan team for a fantastic series victory against the Aussi’s at home after 30 years ! A true team effort. Well done boys ! Feeling so emotional.
— Sanath Jayasuriya (@Sanath07) June 21, 2022
இலங்கை - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 24ஆம் திகதி கொழும்பில் நடக்கிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022