நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சி எம்.பி-யை தாக்க முயன்ற ஆளும் கட்சி எம்.பி! சிக்கிய காட்சி
இலங்கை நாடாளுமன்றத்திற்குள் வைத்து ஆளும் கட்சி எம்.பி, எதிர்க்கட்சி எம்.பி-யை தாக்க முயன்ற சம்பத்தின் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.
மே 20ம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது இச்சம்பவம் நடந்துள்ளது.
நாடாளுமன்றத்திற்குள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) எம்.பி சனத் நிசாந்த, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) எம்.பி. விஜித ஹேரத்தை தாக்க முயன்றது கமெராவில் சிக்கியுள்ளது.
மே 9 அன்று கொழும்பில் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது SLPP தலைமையிலான தாக்குதல்களில் ஈடுபட்டதற்காக சனத் நிசாந்த தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
காவலில் இருந்த படி நிசாந்த, நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Video of MP Sanath Nishantha trying to attack MP Vijitha Herath in Parliament has been released on social media. #Lka pic.twitter.com/zYBfukHggG
— Manjula Basnayake (@BasnayakeM) May 22, 2022
அமைதி போராட்டகாரர்கள் மீதான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களின் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையின் போது வீடுகளுக்கு தீ வைப்பது தொடர்பான கடும் வாக்குவாதத்தின் போது எம்.பி விஜித ஹேரத்தை அச்சுறுத்தும் விதத்தில் எம்.பி நிசாந்த சென்றது கமெராவில் சிக்கியது.
பின்னர் அவர் பாராளுமன்ற பாதுகாப்பாளர்களால் தடுக்கப்பட்டு மீண்டும் ஆளும் கட்சி இருக்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.