இந்திய அணியின் இளம் வீரருக்கு திருமணம் முடிந்தது! வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்
இந்திய அணியின் இளம் வீரரான சந்தீப் சர்மாவுக்கு திருமணம் முடிந்த நிலையில், அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடர் மூலம் பிரபலமான வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா, அதன் பின் இந்திய அணியில் இடம் கிடைக்கும் போது சிறப்பாக தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக கொடுத்து வருகிறார்.
தற்போது ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இவர் , அந்தணிக்காக மட்டும் விளையாடிய போது 39 விக்கெட்டுகளை எடுத்து கொடுத்துள்ளார்.
இதனால் இவரை விரைவில் இந்திய அணி நிரந்தர இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
A special addition to the #SRHFamily.?
— SunRisers Hyderabad (@SunRisers) August 20, 2021
Congratulations to Mr and Mrs Sharma ??
? to a lifelong partnership!#OrangeOrNothing #OrangeArmy pic.twitter.com/gQcLsX9nIL
இதை சன்ரைசர்ஸ் அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அவர் திருமணம் செய்து கொண்டவர் அவருடைய காதலி தான் என்று கூறப்படுகிறது. ஆனால், அது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளதால், விரைவில் சந்தீப் சர்மா ஐக்கிய அரபு அமீரகத்தில் அணியுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.