பிக் பாஷ் லீக்: பெர்த் ஸ்கார்ச்சர்ஸை சம்பவம் செய்த சந்து
BBL லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிக்கு எதிராக பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 127 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
குரிந்தர் சந்து அபார பந்துவீச்சு
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது.
That’s how you answer a batter on the charge! 💥 Sandhu strikes back after being hit for six. #GoldenMoment #BBL15 pic.twitter.com/AUTlQVCghX
— KFC Big Bash League (@BBL) January 7, 2026
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே ஃபின் ஆலன் 8 ஓட்டங்களில் குரிந்தர் சந்துவின் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த கோனொலியை 3 ஓட்டங்களில் பெஹ்ரென்டோர்ப் வெளியேற்ற, மிட்செல் மார்ஷ் 27 (25) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஆரோன் ஹார்டி 44 ஓட்டங்கள்
அதன் பின்னர் டர்னர் (12), எவன்ஸ் (8) மற்றும் ஹாப்சன் (10) ஆட்டமிழந்து நடையைக்கட்ட, ஆரோன் ஹார்டி (Aaron Hardie) 44 ஓட்டங்களில் இருந்த நிலையில் சந்து ஓவரில் அவுட் ஆனார்.
மேலும் ஜோயல் பாரிஸ் (0), டேவிட் பைன் (0) ஆகியோரது விக்கெட்டுகளையும் சந்து கைப்பற்ற, பெர்த் அணி 127 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அபாரமாக பந்துவீசிய குரிந்தர் சந்து (Gurinder Sandhu) 4 விக்கெட்டுகளும், ஹஸன் கான் 2 விக்கெட்டுகளும், பெஹ்ரென்டோர்ப் மற்றும் சதர்லேண்ட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Another 4-wicket haul for Sandhu including a ruthless 19th‑over burst with 3 in 4 balls! 🔥 #BBL15 pic.twitter.com/ImhFA2FFfY
— KFC Big Bash League (@BBL) January 7, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |