திரிக்கப்பட்ட தமிழரின் வழிபாடு முறை.! - பகீர் கிளப்பும் வீடியோ!
சங்க காலம் என்பது பண்டைய தென்னிந்திய வரலாற்றில் நிலவிய தமிழகம் தொடர்பான ஒரு காலப்பகுதியாகும். இது குறிப்பாக மூன்றாவது சங்க காலத்தைக் குறிப்பிடுவதாகும்.
தென்னிந்திய புராணங்களில் காணப்படும் கூற்றுகளின்படி, முற்காலத் தமிழகத்தில் தலைச் சங்கம், இடைச் சங்கம் மற்றும் கடைச் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் காணப்படுகிறது.
இம்முச்சங்கங்களில் மூன்றாவது சங்க காலமான கடைச்சங்க காலத்தையே வரலாற்றாசிரியர்கள் சங்ககாலமாக எடுத்துக் கொள்கின்றனர்.
சங்க காலத்தில் தான் வழிபாடுகளுக்கான ஆதாரங்கள் கிடைக்கிறது. அதாவது மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி திணையின் கடவுளாக முருகன் காணப்படுகிறார்.
முருகன் ஓர் இளம் ஆண் கடவுள். அந்தகாலத்தில் முருகன் வேட்டைக்குரிய தெய்வமாக பார்க்கப்பட்டார். அதிலும் பெண்களுக்கு பிடிக்கக் கூடிய தெய்வம் என்ற நம்பிக்கை சங்க காலத்தில் இருந்தது.
அந்த காலத்தில் இருந்த பெண்கள் முருகன் மீது காதல் வயப்பட்டு, சாப்பிடாமல் இருப்பது எல்லாம் வழக்கம். அதன்போது அப்படிப்பட்ட பெண்களை முருகு பிடித்தவர்கள் என்று தான் அழைப்பர்.
முருகு என்றாலே அச்சம் தரக்கூடிய ஆண் என கருதப்பட்டது. பெண்ணிடம் இருந்து அந்த ஆசைகளை விரட்டுவதற்கு வேலன் வெறியாட்டம் என்ற பூஜை நடத்தப்படும்.
குறித்த பூஜையின் செம்மறி ஆடுகளை வெட்டி, சோற்றுடன் கலந்து அப்படியே தெரிக்க விடுதல் போன்ற சம்பிரதாயங்கள் நடத்தப்படும்.
அதாவது அந்த காலத்தில் முருகப்பெருமானுக்கு மாமிசம் படைக்கப்பட்டுள்ளது. போர் கடவுள் என அழைக்கப்படுவதால் இரத்தம் கலந்த சாதம் தான் வழங்கப்பட வேண்டும் என்ற நியதி இருந்துள்ளது.
மேலும் இது குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை விரிவாக பார்க்கவும்.
வீடியோ
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |