சங்ககாலத்தின் இலக்கிய பண்புகள்
சங்க கால மக்களுடைய வாழ்க்கையைப் பொருளாகக் கொண்டவையே சங்ககால இலக்கியங்களாகும்.
சங்ககாலம் என்பது 1 - 3 நூற்றாண்டு வரையான காலப்பகுதியாகும். இது இயற்கை நெறி காலம் என்று அழைப்பர்.
சங்க கால மக்களுடைய வாழ்வு அக வாழ்வு, புறவாழ்வு என இருவகையில் அமைந்துள்ளது.
அதுப்போலவே சங்ககால இலக்கியங்களும் அகத்திணை இலக்கியங்கள், புறத்திணை இலக்கியங்கள் என இரு வகையில் காணப்படுகிறது.
இயற்கையோடு ஒன்றாக வாழ்ந்து வந்த சங்ககால மக்களது வாழக்கைமுறையை பொருளாகக்கொண்ட சங்ககாலத்தின் பண்புகள் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
- அகம், புறம் என்ற பொருள் மரபிற்குள் அடங்கும் பாடல்கள்.
-
இயற்கையோடு ஒட்டியவையாகும்.
-
முதல், கரு, உரி பொருள் காணப்படுகிறது.
-
இயற்கை வர்ணணைகள் கையாளப்பட்டுள்ளது.
-
அகத்திணைப்பாடல்கள் பெயர்சுட்டா பாடல் ஆகும்.
- இங்கு அகவல், வஞ்சி பாவகைளின் பயன்பாடு அதிகம்.
அகத்திணை பண்புகள்
-
காதல் பாடல்கள் காணப்படல்.
-
ஒருவரின் பெயர் சூடாமல் பாடல் இருத்தல்.
-
முதல், கரு, உரி என்பவற்றின் பயன்பாடு.
-
அன்பின் ஐந்திணை வெளிப்பாடு. (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
-
கைக்கிளை. அதாவது ஒரு தலைக்காதல் காணப்படுதல்.
-
அணிகளின் பயன்பாடு.
-
பெரும்பாலும் அகவற்பாவினால் பாடல்கள் பாடப்பட்டுள்ளது.
- பாத்திரக்கூற்றாக அகப்பாடல்கள் அமைந்துள்ளது.
புறத்திணை பண்புகள்
-
போர் ஒழுக்கம் காணப்பட்டது.
-
நிலையாமை கருத்துகளை வெளிப்படுத்துகிறது.
-
மன்னர்களின் கொடை, புகழ் மற்றும் வீரம் என்பவை பற்றி கூறும்.
-
பெயர் சூட்டும் பாடல்கள் காணப்படும்.
-
ஆற்றுபடை நூல்கள் இயற்றப்பட்டமை. ( திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை (மலைபடுகடாம்), கூத்தராற்றுப்படை )
- புலவர்கள் பாடும் பாடலாக உள்ளது.
இவ்வாறு இயற்கைக் காட்சிகளின் அழகையும் அகனைந்திணையின் ஒழுக்கங்களையும் பண்டைக்கால நாகரிகச் சிறப்பையும் வேறுபல அரிய பொருள்களையும் அழகுற விளக்கிக் கூறுவனவே சங்க இலக்கியங்களாகும்.