இந்த 2 பேரும் மிகவும் திறமையானவர்கள்! இந்திய கிரிக்கெட் வீரர்களை புகழ்ந்த ஜாம்பவான் சங்ககாரா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் குறித்து இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா மனம் திறந்து பேசியுள்ளார்.
கோலி, ரோகித் சர்மா
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது. 20 ஓவர் தொடரில் இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகிய மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
AFP
சங்ககாரா புகழாரம்
இந்த நிலையில் இந்திய அணி தொடர்பில் இலங்கை அணி முன்னாள் வீரர் குமார் சங்ககாரா பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், சஞ்சு சாம்சன் எந்த இடத்திலும் பேட்டிங் செய்யும் திறன் கொண்டவர், ஆனால் டி20யில் 4வது இடத்தில் அவரது சிறந்த நிலை இருக்கும் என தெரிவித்தார்.
மேலும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் மிகவும் திறமையான வீரர்கள் என புகழாரம் சூட்டி பேசியுள்ளார்.
pti/icc twitter