47 பந்தில் ஆட்டமிழக்காமல் 106 ரன் விளாசிய சங்ககாரா! தவிடுபொடியான இங்கிலாந்து
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டியில், இலங்கை மாஸ்டர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இங்கிலாந்து 146
ராஜ்பூரில் நடந்த போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் இயான் மோர்கன் 10 ஓட்டங்களிலும், ஆம்புருஸ் 17 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் அரைசதம் அடித்த மஸ்டர்ட் 39 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுத்து உதானா ஓவரில் அவுட் ஆனார்.
அதனைத் தொடர்ந்து மேடி (15) ஸ்கோஃபில்ட் (1) ஆட்டமிழக்க, பிரெஸ்னன் 18 ஓட்டங்களும், ட்ரெம்லெட் 14 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதன்மூலம் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் 5 விக்கெட்டுக்கு 146 ஓட்டங்கள் எடுத்தது. உதானா, தில்ருவன், குணரத்னே, சதுரங்கா மற்றும் மெண்டிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
குமார் சங்ககாரா ருத்ரதாண்டவம்
அடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் ரோமேஷ் 16 ஓட்டங்கள் அவுட் ஆக, அணித்தலைவர் குமார் சங்ககாரா ருத்ரதாண்டவம் ஆடினார்.
அதிரடி சதம் விளாசிய அவர் 47 பந்துகளில் 1 சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்கள் குவித்தார்.
அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த அசேல குணரத்னே 22 (12) ஓட்டங்கள் எடுக்க, இலங்கை அணி 12.5 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |