விமான நிறுவன ஊழியரால் மிரட்டப்பட்டேன் - சங்கக்கார குற்றச்சாட்டு
sangakkara alleges threatened by ryanair staff at dublin airport: விமான நிறுவன ஊழியரால் மிரட்டப்பட்டதாக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார குற்றஞ்சாட்டியுள்ளார்.
விமான நிறுவன ஊழியரால் மிரட்டப்பட்ட சங்கக்கார
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்கார, தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அயர்லாந்தில் உள்ள டப்ளின் விமான நிலையத்தில், விமான நிறுவன ஊழியர்கள் தன்னிடம் பாகுபாடு காட்டியதாகவும், மிரட்டும் தோனியில் நடந்து கொண்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "டப்ளினில் Ryanair நிறுவனத்தின் நுழைவாயில் பணியாளர்களால் பாகுபாடான முறையில் நடத்தப்பட்ட அனுபவம் வேறு யாருக்காவது ஏற்பட்டுள்ளதா?
Has anyone experienced discriminatory gate personnel @Ryanair in Dublin ? I with my family just did and it was shocking. The tone of address and the mishandling of procedure and threatening behavior. Unacceptable for any passenger. First bad experience in Dublin
— Kumar Sangakkara (@KumarSanga2) October 28, 2026
நான் என் குடும்பத்துடன் இருந்த போது நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் உரையாடிய விதம், நடைமுறைகளைக் கையாண்ட விதம் மற்றும் அச்சுறுத்தும் நடத்தையை எந்தவொரு பயணியாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. டப்ளினில் இதுவே எனது முதல் மோசமான அனுபவம்" என தெரிவித்துள்ளார்.
அந்த சூழலுக்கு என்ன காரணம் என்பதையோ அல்லது சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்த மேலதிக விவரங்களையோ சங்கக்காரா வெளியிடவில்லை.
Ryanair நிறுவனமும் இந்த குற்றச்சாட்டு குறித்து எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.