ஆவலுடன் காத்திருக்கிறேன்! அவரை ஏன் முதலில் களமிறக்க கூடாது? குமார் சங்கக்காரா கேள்வி
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லரை ஏன் முதலில் களமிறக்க கூடாது என இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், அதன் பின்னர் விளையாடிய நெதர்லாந்து அணிக்கு எதிரான சர்வதேச போட்டிகளிலும் அதிரடியில் மிரட்டினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கும் பட்லர், தனது தேசிய அணியில் நடுகள வீரராக தான் களம் காண்கிறார். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை அவர் 7வது வீரராக களமிங்குகிறார். எனினும் அவரது ஆட்டத்தில் எந்த தொய்வும் இல்லை.
Photo Credit: Twitter
இந்த நிலையில், பட்லர் குறித்து இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா கூறுகையில், 'டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக பட்லர் களமிறங்குவதை காண ஆவலாக உள்ளேன்.
7வது இடத்தில் அவர் துடுப்பாட்டம் செய்து குறித்து நாம் எப்போதும் பேசி வருகிறோம். ஆனால் சேவாக், ஹேடன் போன்ற அதிரடி வீரர்கள் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடியதை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி இருக்கையில் ஏன் பட்லர் மட்டும் தொடக்க வீரராக களமிறங்க கூடாது?' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Photo Credit: Rajasthan Royals
Photo Credit: REUTERS