269 உயிர்களை காவு வாங்கிய கொடூரத் தாக்குதலுக்கு இன்னும் நீதியில்லை! சங்கக்காரா வேதனை
3 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் ஈஸ்டர் தாக்குதல் நீதிக்காகவும் முடிவுக்காகவும் காத்திருக்கிறோம் என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்காரா வேதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இன்று ஈஸ்டர் தாக்குதல் நடந்து இன்று 3 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இத்தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு உறவினர்கள் இன்று மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
ரஷ்யாவுக்கு முடிவு கட்ட ஐரோப்பியாவில் ரகசிய இடத்தில் வைத்து உக்ரேனியர்களுக்கு அமெரிக்கா பயிற்சி!
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்காராவும், ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து்ளளார்.
இதுகுறித்து சங்கக்காரா தனது பதிவிட்ட ட்வீட்டில், ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட 269 பேரை நினைவு கூர்கிறோம்.
துக்கத்தில் இருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் பிரார்த்தனைகளும் பலமும்.
3 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் நீதிக்காகவும் முடிவுக்காகவும் காத்திருக்கிறோம் என சங்கக்காரா வேதனை தெரிவித்துள்ளார்.